கடந்த ஆண்டு குவைத்தில் இருந்து 8100 இந்தியர்கள் உள்பட 30,000 வெளிநாட்டினர் நாடு கடத்தல்..!

கடந்த ஆண்டு குவைத்தில் இருந்து 8100 இந்தியர்கள் உள்பட 30,000 வெளிநாட்டினர் நாடு கடத்தல்..!

குவைத் சிட்டி: கடந்த ஆண்டு குவைத்தில் இருந்து 30,000 வெளிநாட்டவர்களை உள்துறை அமைச்சகம் நாடு கடத்தியுள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள் ஆவர்.

குடியிருப்பு மற்றும் போக்குவரத்து விதிகளை மீறுவோர் மட்டுமின்றி, பிச்சை எடுத்தல், மதுபான வியாபாரம், ஒழுக்கக்கேடான நடவடிக்கைகள் மற்றும் தெருவோர வியாபாரத்தில் ஈடுபடும் வெளிநாட்டவர்களும் நாடு கடத்தப்படுவதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

சட்டத்தை மதிக்காத அனைத்து வெளிநாட்டினரும் நாடு கடத்தப்பட வேண்டும் என்பதே அதிகாரிகளின் நிலைப்பாடு. நீதித்துறை நடைமுறைகளின் ஒரு பகுதியாக, கடந்த ஆண்டு மட்டும் 660 பேர் நாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்டனர்.

நாடு கடத்தப்பட்ட 30,000 வெளிநாட்டவர்களில் பெரும்பாலானவர்கள் ஆண்கள் ஆவர். அதேபோல் நாடு கடத்தப்பட்ட இந்தியர்களின் எண்ணிக்கை 8100. அதைத் தொடர்ந்து 3500 பேருடன் வங்கதேசத்தினர் உள்ளனர். அடுத்த இடத்தில் 3,000 எகிப்தியர்கள் நாட்டை விட்டு கடத்தப்பட்டதாக உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. 
தற்போது அந்நாட்டு சிறைகளில் உள்ள வெளிநாட்டினரை விரைவில் நாடு கடத்த அதிகாரிகள் முயற்சித்து வருகின்றனர். அதேவேளை விசா விற்பனையாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் வெளிநாட்டினர் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கும் முறை பலனளிக்காது என சட்ட நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.