குவைத்தில் இம்மாத இறுதியில் 3 நாட்கள் தொடர் விடுமுறை!
குவைத்தில் புத்தாண்டை முன்னிட்டு ஜனவரி 1ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமாக குவைத் சிவில் சர்வீஸ் கமிஷன் உத்தரவு பிறப்பித்ததை தொடர்ந்து, டிசம்பர் 30 மற்றும் 31 ஆகிய தேதிகளை சேர்த்து (வெள்ளி மற்றும் சனிக்கிழமை) மூன்று நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விடுமுறை முடிந்த பிறகு வங்கிகள் மற்றும் அலுவலகங்கள் ஜனவரி 2 ஆம் தேதி மீண்டும் தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.