தங்கள் அணியை ஊக்கப்படுத்த கத்தாருக்கு வருகை தந்த 35,000 அர்ஜெண்டினா மக்கள்!
தோஹா: உலகக் கோப்பை அரையிறுதியில் தங்கள் அணிக்கு ஆதரவளிக்க 35,000 க்கும் மேற்பட்ட அர்ஜென்டினா மக்கள் கத்தாருக்கு வந்துள்ளனர். கத்தாரில் உள்ள தூதரகத்தின்படி, உலகக் கோப்பையில் அர்ஜென்டினாவுக்கு ஆதரவாக 35,000 முதல் 40,000 அர்ஜென்டினா மக்கள் தோஹா வந்துள்ளனர்.
அர்ஜென்டினா மக்கள் மட்டுமின்றி, லியோனல் மெஸ்ஸி மற்றும் அணிக்கு ஆதரவாக கத்தாரில் உள்ள இந்திய மற்றும் வங்கதேச சமூகங்களைச் சேர்ந்த 10,000க்கும் மேற்பட்ட ரசிகர்கள் உள்ளனர். அர்ஜென்டினா ஃபேன்ஸ் கத்தார் என்ற குழுவும் உலகக் கோப்பைக்கு முந்தைய மாதங்களில் கேலரிக்கு உள்ளேயும் வெளியேயும் ஊக்கமளிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது.
Souq Waqif, Mishreeb Town Down Doha, Lusail Boulevard உள்ளிட்ட இடங்களில் அர்ஜென்டினா ரசிகர்களின் கூட்டங்கள் நிரம்பி வழிகின்றன. கத்தாரில் உலகக் கோப்பை அரங்குகளில், குறிப்பாக லுசைல் மைதானத்தில் அர்ஜெண்டினா அணியின் ஜெர்சி அணிந்த ரசிகர்களின் வழக்கமான கூட்டங்கள் அதிக கவனத்தைப் பெறுகின்றன.
லுசைல் மைதானத்தில் நடக்கும் அரையிறுதியில் குரோஷியாவை எதிர்கொள்கிறது பலம் வாய்ந்த அர்ஜெண்டினா அணி. வாமோஸ் அர்ஜென்டினா என்ற பாடல் ரசிகர்கள் கூடும் இடங்களிலும், மைதானங்களில் நடக்கும் போட்டிகளிலும் சத்தமாக கேட்கும் பாடலாக உள்ளது.