சவூதி ஏர்லைன்ஸ் ஊழியர் கொலை வழக்கில் ஒன்றரை மாதத்தில் குற்றவாளிக்கு மரண தண்டனை!
ரியாத்: சவுதி அரேபியாவில், காருக்குள் இருந்த வாலிபரை கொன்று, தீ வைத்து எரித்த வழக்கில், குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. பந்தர் அல் கர்ஹாதி என்ற சவுதி இளைஞன், அவனது நண்பரும் சக ஊழியருமான மற்றொரு இளைஞனால் கொல்லப்பட்டார். விசாரணையை முடித்துக் கொண்ட ஜித்தா குற்றவியல் நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்ததாக சவூதி வழக்கறிஞர் அப்துல் அசிஸ் அல்-குலைசி சமூக ஊடகங்களில் நேரடி வீடியோவில் தெரிவித்தார்.
கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன் இந்த கொடூர கொலை நடந்துள்ளது. சவுதி ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்த பந்தர் அல் கர்ஹாதி என்பவரை அவரது நண்பர் வரவழைத்து காருக்குள் அடைத்து பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். பலத்த தீக்காயம் அடைந்த வாலிபர் காருக்குள்ளேயே உடல் கருகி உயிரிழந்தார். பந்தர் அல் கர்ஹாதி மரண அச்சுறுத்தலுக்கு உள்ளாகும்போது அழும் வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவியது. பந்தர் அல்-கர்ஹாதியின் தந்தை த்வாஹா அல்-அர்கார்டி, மரண தண்டனையில் திருப்தி அடைவதாகக் கூறினார்.