சவுதி அரேபியாவில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 40 சதவீதம் அதிகரிப்பு: செலவினங்களில் 74 சதவீதம் அதிகரிப்பு
ரியாத்: இந்த ஆண்டின் முதல் பாதியில் சவூதியில் சுற்றுலாப் பயணிகளின் செய்த செலவு 74 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் இதுவே அதிக செலவாகும். சவூதி அரேபிய பிரஜைகள் வெளிநாடுகளில் சுற்றுலாவிற்கு செலவிடும் தொகையும் ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது.
இந்த ஆண்டின் முதல் பாதியில் சுற்றுலாப் பயணிகள் சவுதி அரேபியாவில் 71.2 பில்லியன் ரியால்களை செலவிட்டுள்ளனர். கடந்த ஆண்டின் முதல் பாதியுடன் ஒப்பிடும் போது, இந்த ஆண்டு 74 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் இதுவே அதிக செலவாகும். அவர்களில் 62 சதவீதம் பேர் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளும், 38 சதவீதம் பேர் வெளிநாட்டவர்களும் ஆவர்.
முதல் ஆறு மாதங்களில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் 26.7 பில்லியன் ரியால்களையும், உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் 44. பில்லியன் ரியால்களையும் செலவிட்டுள்ளனர்.
கடந்த ஆண்டின் முதல் பாதியில் சவூதி குடிமக்கள் வெளிநாடுகளில் சுற்றுலாவுக்காக 4.3 பில்லியன் ரியால்களை செலவிட்டுள்ளனர். ஆனால் இந்த ஆண்டின் முதல் பாதியில் ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது.