நாளை முதல் துபாய் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் தொடக்கம்..! ஏராளமான பரிசுகள், 75% தள்ளுபடிகள் அறிவிப்பு!

நாளை முதல் துபாய் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் தொடக்கம்..! ஏராளமான பரிசுகள், 75% தள்ளுபடிகள் அறிவிப்பு!

துபாய் ஷாப்பிங் திருவிழா (Dubai Shopping Festival) ஏராளமான பரிசுகள் மற்றும் பெரும் தள்ளுபடியுடன் நாளை (டிச.15) தொடங்குகிறது. இந்த முறை வெற்றியாளர்களுக்கு பெரும் பரிசுகள் காத்திருக்கின்றன, டவுன்டவுனில் 1 மில்லியன் திர்ஹாம் அபார்ட்மெண்ட் மற்றும் புத்தம் புதிய நிசான் கார் உட்பட ஏராளமான பரிசு மழைகள் காத்திருக்கின்றன.

துபாய் ஷாப்பிங் திருவிழா உலகின் மிக நீண்ட சில்லறை விற்பனை திருவிழாவாகும். 2023 ஜனவரி 29 வரை 46 நாட்கள் இந்த திருவிழா நடைபெறும். 3,500 விற்பனை நிலையங்களில் 800க்கும் மேற்பட்ட பிராண்டுகள் இந்த காலக்கட்டத்தில் 75 சதவீதம் வரை தள்ளுபடியுடன் விற்பனைகள் நடைபெறும்.

சிறந்த முறையில் புத்தாண்டு கொண்டாட்டங்கள், பல்வேறு சுவைகளை அறிமுகப்படுத்தும் உணவு கண்காட்சிகள், உள்ளூர் மற்றும் சர்வதேச இசை பிராண்டுகளின் நேரடி கச்சேரிகள் என அனைத்தும் இந்த ஆண்டு விழாவிற்கு வண்ணம் சேர்க்கின்றன.