சுகாதாரமற்ற நிலை..! - ஃபுஜைராவில் 40 நிறுவனங்களுக்கு சீல்! - 685 நிறுவனங்களுக்கு அபராதம்!
புஜைரா: உணவு சமைப்பதற்கான சட்டப்பூர்வ சுகாதாரத் தரங்களை பூர்த்தி செய்யாத 40 நிறுவனங்கள் கடந்த ஆண்டு சீல் வைக்கப்பட்டு மூடப்பட்டதாக ஃபுஜைரா நகராட்சி தெரிவித்துள்ளது. ஃபுஜைரா நகராட்சி சுகாதாரக் கட்டுப்பாட்டுத் துறையின் தலைவர் பாத்திமா மக்ஸா கூறுகையில், உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக நிர்ணயிக்கப்பட்ட தரநிலைகளுக்கு இணங்கத் தவறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
சோதனையின் போது 685 நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. உணவுப் பாதுகாப்பு விதிமுறைகளான உபகரணங்களின் தூய்மை, சுற்றுச்சூழலின் தூய்மை மற்றும் சமையலுக்குப் பயன்படுத்தப்படும் பாத்திரங்களின் தூய்மை போன்றவற்றில் குறைபாடுகள் இருப்பதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டது.
இது தவிர, சில நிறுவனங்களில் இருந்து காலாவதியான மற்றும் மனித நுகர்வுக்குத் தகுதியற்ற உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அவர் கூறினார். நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட உரிமங்களின் கீழ் அங்கீகரிக்கப்படாத நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.