சமூக வலைதளங்களில் அனுமதியின்றி வேறொருவரின் படங்களை வெளியிட்டவருக்கு ரூ.3.38 லட்சம் அபராதம்!
அபுதாபி: சமூக வலைதளங்களில் அனுமதியின்றி வேறொருவரின் படம், வீடியோவை வெளியிடுபவர்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் சிறைத்தண்டனை, அபராதம் உள்ளிட்ட கடுமையான தண்டனைகளை சந்திக்க நேரிடும்.
இந்த குற்றத்திற்காக அபுதாபியில் உள்ள ஒருவருக்கு 15,000 திர்ஹாம்கள் (ரூ. 3.38 லட்சம்) நீதிமன்றம் அபராதம் விதித்தது. அனுமதியின்றி படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்ட வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கீழ் நீதிமன்ற தீர்ப்பை அபுதாபி மேல்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்தது. டிக்டாக் மற்றும் ஸ்னாப்சாட்டில் படத்தை வெளியிடுவதற்கு எதிராக 51,000 திர்ஹாம் இழப்பீடு கோரிய வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
6 மாத சிறைத்தண்டனை மற்றும் 5 லட்சம் அபராதம்
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் அனுமதியின்றி மற்றொரு நபரின் படம் அல்லது வீடியோவை எடுப்பது, நகலெடுப்பது, சேமிப்பது அல்லது விநியோகிப்பது சட்டவிரோதமானது. குற்றத்தின் தீவிரத்தன்மையைப் பொறுத்து, அதிகபட்ச தண்டனையாக 6 மாத சிறைத்தண்டனை மற்றும் 5 லட்சம் திர்ஹம் முதல் அபராதம் விதிக்கப்படும்.