ஓராண்டுக்கு பெட்ரோல் இலவசம்! - துபாய் கால்பந்து ரசிகர்களுக்கு காத்திருக்கும் பரிசு!
துபாய்: ஐக்கிய அரபு எமிரேட்ஸின் எரிபொருள் விநியோக நிறுவனமான எமராத் Emarat ஒரு வருடம் முழுவதும் இலவச எரிபொருள் நிரப்புவதாக உறுதியளித்துள்ளது. அக்டோபர் 29ஆம் தேதி நடைபெறவுள்ள ADNOC ப்ரோ லீக் போட்டியைப் பார்ப்பவர்களுக்கு இந்தச் சலுகை கிடைக்கும் என்று சமூக வலைத்தளங்கள் மூலம் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
View this post on Instagram
போட்டியை காண வருபவர்களில் தேர்வு செய்யப்படுவோருக்கு ஓராண்டுக்கு இலவச எரிபொருள் பெற 'குலுக்கல்' நடைபெற உள்ளதாக சூசகமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பரிசுத் திட்டங்களுக்கு விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் போட்டி துபாய் ராஷித் மைதானத்தில் அக்டோபர் 29ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறவுள்ளது. அன்று ஷபாப் அல் அஹ்லி எப்சி மற்றும் அல் ஐன் எப்சி அணிகள் மோதுகின்றன. 2022-23 சீசனுக்கான ஷபாப் அல் அஹ்லி எஃப்சியின் அதிகாரபூர்வ ஆற்றல் பங்குதாரர் எமிராத் என்பது குறிப்பிடத்தக்கது.