குவைத்தில் தொடரும் சீரற்ற வானிலை! - கடும் மூடுபனியால் வாகன ஒட்டிகளுக்கு எச்சரிக்கை!

குவைத்தில் தொடரும் சீரற்ற வானிலை! - கடும் மூடுபனியால் வாகன ஒட்டிகளுக்கு எச்சரிக்கை!

குவைத்தில் கடும் மூடுபனி மற்றும் சீரற்ற வானிலை தொடர்கிறது. வாகன ஓட்டிகளை எச்சரிக்கையாக இருக்குமாறு உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கடும் பனிமூட்டம் காணப்படுகிறது. குறைந்த பார்வை வாகன போக்குவரத்து மற்றும் கப்பல் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஷுவைக் மற்றும் ஷுஐபா துறைமுகங்களில் இருந்து கப்பல் போக்குவரத்து ஞாயிற்றுக்கிழமை நிறுத்தப்பட்டது. குவைத் துறைமுக ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், காலை 8 மணி முதல் கப்பல்களின் இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. பணியாளர்களின் பாதுகாப்பு மற்றும் துறைமுகங்களில் உள்ள வசதிகளை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் துறைமுக அதிகாரசபை தெரிவித்துள்ளது. புதன் இரவுக்குள் பார்வைத் திறன் மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  வாகன ஓட்டிகள் எச்சரிக்கையாக இருக்குமாறும் குவைத் உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.