குவைத்தில் மின்னணு பண பரிவர்த்தன சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்க தடை!

குவைத்தில் மின்னணு பண பரிவர்த்தன சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்க தடை!

மின்னணு முறையில் பணம் செலுத்துவதற்கு வாடிக்கையாளர்களிடம் கட்டணம் வசூலிக்க வேண்டாம் என குவைத் மத்திய வங்கி அறிவுறுத்தியுள்ளது. பரிவர்த்தனைகளை நடத்தும் போது வாடிக்கையாளர்களிடமிருந்து எந்தவிதமான கட்டணமும் அல்லது கமிஷனும் வசூலிக்க மத்திய வங்கி தடை விதித்துள்ளது.

இதுதொடர்பான சுற்றறிக்கையை மத்திய வங்கி நாட்டிலுள்ள பல்வேறு வங்கிகள் மற்றும் சேவை வழங்குநர்களுக்கு அனுப்பியுள்ளதாக உள்ளூர் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. முன்னதாக, சில சேவை வழங்குநர்கள் மின்னணு கட்டண சேவைகளுக்கு வாடிக்கையாளர்களிடமிருந்து நிலையான கட்டணங்களை வசூலித்தனர்.

குவைத் விஷன் 2035 இன் ஒரு பகுதியாக, சேவைகளை டிஜிட்டல் மயமாக்க நிதி அமைச்சகம் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதற்கிடையில், மின்னணு கட்டண தளத்தை தொடங்க உலகளாவிய நிதி நிறுவனங்களை அரசாங்கம் பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.