குவைத்தில் அவசர காலங்களில் மட்டுமே கருக்கலைப்புக்கு அனுமதி!
குவைத்தில் கருக்கலைப்பு என்பது சட்டவிரோதமானது. ஆனால் தாய் அல்லது குழந்தையின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலைகளில், கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு கருக்கலைப்பு அனுமதிக்கப்படுகிறது என்று சுகாதார அமைச்சகத்தின் உதவி துணைச் செயலாளர் டாக்டர். பாத்திமா அல் நஜ்ஜார் தெளிவுபடுத்தினார். நிபந்தனைகளை தவறாக பயன்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இயங்கி வந்த சட்டவிரோத கருக்கலைப்பு மையங்கள் பாதுகாப்புப் படையினரிடம் சிக்கின. ஒரு வாரத்தில் ஆறு அல்லது ஏழு கருக்கலைப்பு சம்பவங்கள் இவ்வாறான மையங்களுக்கு வருவது வழக்கம் என்று தெரிவிக்கப்படுகிறது. பல சட்டவிரோத கருக்கலைப்பு மையங்கள் இன்னும் பிடிபடாமல் இயங்கி வருவதாக குறிப்புகள் உள்ளன.