தேசிய விடுதலை தின கொண்டாட்டங்களுக்கு ஆயத்தமாகும் குவைத் முனிசிபாலிட்டி.!
குவைத் தேசிய விடுதலை தின கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகளை குவைத் நகராட்சி தொடங்கியுள்ளது. தேசிய தினத்தை முன்னிட்டு வண்ணமயமான நிகழ்ச்சிகள் தயாராகி வருகின்றன.
கோவிட் கட்டுப்பாடுகளுக்குப் பிறகு முதல் முறையாக தேசிய தின கொண்டாட்டங்கள் பெரிய அளவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, கொடி மற்றும் அலங்காரக் கட்டுப்பாட்டுத் துறையின் தலைமையில் பயான் அரண்மனை, உத்தியோகபூர்வ கட்டிடங்கள், விமான நிலையங்கள் மற்றும் முக்கிய சாலைகள் அலங்கரிக்கப்படும் என்று உள்ளூர் ஊடகமான அல்-கபாஸ் தெரிவித்துள்ளது.
ஒரு மாத கால கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பல்வேறு கலை மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும். கேமல் ரேசிங் கிளப், ஆறு கவர்னரேட் தலைமையகம், அல்-கசாலி, துனிஸ், பெய்ரூட், அரேபிய வளைகுடா, அல்-தாவோன் மற்றும் நான்காவது ரிங் ரோடு ஆகிய இடங்களில் கொடியேற்றும் நிகழ்ச்சி அடுத்த வாரம் தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். பிப்ரவரி 1ம் தேதி குவைத் நகரில் உள்ள கொடி சதுக்கத்தில் கொடியேற்று விழா நடைபெறும் என நகராட்சி அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.