குவைத்: வெளிநாட்டவரிடம் கொள்ளையடித்த போலி அதிகாரிகளுக்கு 10 ஆண்டுகள் சிறை!

குவைத்: வெளிநாட்டவரிடம் கொள்ளையடித்த போலி அதிகாரிகளுக்கு 10 ஆண்டுகள் சிறை!

குவைத் சிட்டி: குவைத்தில் சிஐடி அதிகாரிகள் போல் நடித்து  வெளிநாட்டவரை கடத்திச் சென்ற வழக்கில் 3 இளைஞர்களுக்கு குவைத் உச்ச நீதிமன்றத்தால் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மூவரும் குவைத் நாட்டை சேர்ந்தவர்கள் என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் போல் நடித்து, திருட்டு குற்றம் சாட்டி மிரட்டி, வெளிநாட்டவரை கடத்திச் சென்று பணம் மற்றும் பொருட்களை கொள்ளையடித்துச் சென்றதுதான் வழக்கு.  அந்தக் குழு வெளிநாட்டவரை அணுகியபோது, ​​அவரைக் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்வதாகக் கூறி கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.

குடியுரிமை பெறாத ஒருவரை கடத்திச் சென்று மிரட்டியதாகவும், போலிஸ் அதிகாரி போல் நடித்து வெளிநாட்டவரை ஏமாற்றியதாகவும் அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.  வழக்கு விசாரணையை முடித்த குவைத் உச்ச நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட மூவருக்கும் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.