சொந்த நாட்டின் ஓட்டுநர் உரிமம் மூலம் சவுதியில் மூன்று மாதங்களுக்கு வாகனம் ஓட்டலாம்!

சொந்த நாட்டின் ஓட்டுநர் உரிமம் மூலம் சவுதியில் மூன்று மாதங்களுக்கு வாகனம் ஓட்டலாம்!

ரியாத்: சவூதி அரேபியாவுக்கு வரும் ஓட்டுநர் விசா வைத்திருப்பவர்கள் தங்கள் நாட்டின் ஓட்டுநர் உரிமத்தைப் பயன்படுத்தி மூன்று மாதங்கள் வரை வாகனம் ஓட்ட அனுமதிக்கப்படுகிறார்கள். ஆட்சேர்ப்பு விசாவில் வந்த நாளிலிருந்து மூன்று மாதங்களுக்கு நீங்கள் சவுதி அரேபியாவில் வாகனம் ஓட்டலாம். ஆனால், அதற்குள் சவுதி உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

இந்த வசதியைப் பெற, வெளிநாட்டு ஓட்டுநர் தனது சொந்த நாட்டு உரிமத்தை அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தால் மொழிபெயர்த்திருக்க வேண்டும். மேலும், உரிமத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வகை வாகனங்களை மட்டுமே இயக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிபந்தனைகள் பின்பற்றப்படாவிட்டால், போக்குவரத்து விதிமீறலாக கருதப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

சவுதி குடிமகன் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த சவுதி போக்குவரத்து துறை ட்விட்டரில் இதை அறிவித்துள்ளது.