ஆக்ஸ்போர்டு அகராதியில் 1000 வார்த்தைகள்
ஆங்கில மொழி தன்னளவில் வளர்ந்து கொண்டே வரும் மொழி. இங்கிலாந்து நாடு உலகின் பல்வேறு நாடுகளில் காலனி அரசுகளை ஏற்படுத்திய போது, அந்நாடுகளில் உள்ள மொழிகளில் ஆளுமை கொண்ட, மரபான வார்த்தைகளையெல்லாம் ஆங்கில வடிவமாக்கிக் கொண்டது.
உதாரணமாக தமிழில் கட்டுமரம் என்ற வார்த்தை ஆங்கிலத்தில் Catamaran என்றே வழங்கப்படுகிறது.
புளியை Tamarind என்று அழைக்கிறது. புளி இங்கிலாந்தில் இல்லாத தாவரம். இந்தியாவில் புளியை காணும் முன்பே அரேபியாவில் பேரிட்சம் பழத்தை அறிந்திருந்தனர். அரபியில் பேரிட்சம் பழத்திற்கு ‘தமர்’ என்று பெயர். இந்தியாவில் புளி, பேரிச்சம் பழம் போன்று காணப்பட்டதால், இந்திய பேரிச்சம் என்று பொருள் வரும் படி, தமர் இந்து (Tamar Ind) என்று பெயரிட்டார்கள். அது தான் Tamarind என்று அழைக்கப்படுகிறது.
ஆங்கிலத்தில் வரும் சட்டம் தொடர்பான சொற்கள் பிரெஞ்சு மொழியில் உள்ளனவை. அது போல் வங்கி, நிதி தொடர்பான சொற்களும். அறிவியல் மருத்துவம் உளவியல், தத்துவம் தொடர்பான சொற்கள் லத்தீன், கிரேக்க, அரபி மொழிகளில் இருந்து மருவிக் கொண்டவை. கண்புரைக்கு Cataract என்று பெயர். தமிழில் வெள்ளெழுத்து. அதாவது எழுத்து வெள்ளையாகத் தெரிய வேண்டும். ஆனால் மங்கலாகத்தான் தெரியும். தமிழில் வெள்ளெழுத்து என்ற மொழிபெயர்ப்பு நேரடியாக கிரேக்க மூலத்தில் இருந்து எடுத்துக் கொள்ளப்பட்டது. கிரேக்க மொழியில் Cataract என்றால் அருவி என்று பொருள். அருவி வெள்ளையாக இருக்கும். அருவிக்கு பின்னால் இருக்கும் மலையின் பரப்பை தெரியாத படிக்கு அருவி வெள்ளையாக நின்று மறைத்துக் கொள்ளும். 40 வயதுக்கு மேல் பார்வையில் ஏற்படும் குறைபாட்டை Cataract என்று கிரேக்கம் மொழியில் கூறப்பட்டது. ஆங்கில மொழியும் கிரேக்கத்தில் இருந்து எடுத்துக் கொண்டது.
அது போல் blending words. உதாரணமாக Hotel என்றால் உணவகம். Motel என்றால் சாலையோரம் அமைந்திருக்கும் Hotel கள் Motel என்று அழைக்கப்படுகிறது. அதாவது, பயணம் செய்பவர்கள் இடையில் நிறுத்தி உணவு எடுத்துக் கொள்ளும் Hotel. Motor+Hotel என்ற இரட்டை வார்த்தை இணைந்து உருவான சொல் Motel என்பது. இது போல் ஏராளமான சொற்கள் உள்ளன.
அறிவியல், மருத்துவத்துறை, தொழில்நுட்ப வளர்ச்சிகளும் ஆங்கில மொழியை செம்மைப்படுத்தி வருகின்றன. Technology என்ற வார்த்தை Techi என்று சுருங்கி விட்டது. அது போல் Hi-Fi lifestyle; Wi-Fi- network.
செல்ஃபோன் உபயோகத்திற்கு வந்த பிறகு குறுஞ்செய்திகள் வளமடைந்தன. குறுஞ்செய்திகளில் புழங்கப்பட்ட சுருக்க சொற்கள் இப்போது ஆங்கில ஏடுகளில் தாராளமாகக் காணப்படுகின்றன.
அதுபோல் புதிய நோய், புதிய மருந்து எல்லாம் ஐரோப்பியர்கள் கண்டு பிடிப்பாக இருப்பதால் அவற்றிற்கான பெயர்களும் ஆங்கில மொழியில் அமைவது தவிர்க்க முடியாததாக இருக்கிறது. ஆங்கிலத்தில் Cancer என்றால் நண்டு என்று பெயர். அதனால் தமிழில் நண்டு ராசிக்கு Cancer என்று பெயர். Cancer நோய்க்கு ஏன் அந்தப் பெயர். நண்டு கடற்கரை மணலில் ஒரு இடத்தில் குழிபறித்து உள்ளேயே பயணித்து வேறொரு இடத்தில் மணலை வெடித்து வெளியேறும். அதுபோல்தான் Cancer என்ற நோய் எங்கே எப்போது ஆரம்பித்தது என்று கண்டறிய முடியாது. மனித உடலில் நீண்ட காலம் பயணித்து ஒரு நாள் பிரிதொரு இடத்தில் வெடித்து வெளியேறும். அதனால் Cancer என்று பெயரிட்டார்கள். தமிழில் அதை அப்படியே புற்றுநோய் என்று மொழி பெயர்த்தார்கள். வார்த்தையை மொழி பெயர்க்காமல், நோயின் தன்மையை தமிழில் மொழி பெயர்த்தது சிறப்பு.
அதுபோல் செல்போன் பயன்படுத்தி பழகியவர்களுக்கு செல்போன் இல்லாதபோது தகவல் பரிமாற முடியாமல் ஏற்படும் தவிப்பை Nomophobia என்று பெயரிட்டுள்ளார்கள்.
இப்போது, ஆங்கில செய்தி ஊடகங்களில் அடிக்கடி Catch 22 என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. நமது புழக்கத்தில் இருக்கும் எந்த ஆங்கில அகராதியிலும் Catch 22 க்கு அர்த்தம் இல்லை. ஆனால் Catch 22 என்றால் ‘கடும் நெருக்கடி’ என்று பொருள். His Situation in Catch 22 என்றால் அவன் கடும் சிக்கலில் இருக்கிறான் என்று பொருள். இவ்வாறாக, ஆங்கில மொழி ஆண்டு தோறும் வளர்ச்சியடைந்து கொண்டே வருகிறது.
கடந்த ஆண்டு இவ்வாறாக, ஆங்கிலத்தின் முதன்மையான அகராதி ஆக்ஸ்போர்டு, 1000 புதிய சொற்களை இணைத்துக் கொண்டிருக்கிறது. அதில் Brexit மற்றும் Grexit என்ற வார்த்தைகள் பிரபலம். 28 நாடுகளை கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறக் கூடும் என்ற எதிர்பார்ப்பு உருவான போது Brexit என்ற வார்த்தை உண்டானது. அதுபோல் கிரீஸ் நாடு கடும் நிதிநெருக்கடியை சந்தித்த போது, 19 நாடுகளை கொண்ட ஐரோப்பிய மண்டலத்தில் இருந்து (eurozone) கிரீஸ் வெளியேறப் போவதாக சொன்னபோது Grexit என்ற வார்த்தை உண்டானது. ஐரோப்பிய ஒன்றியத்தை சேர்ந்த இந்த 19 நாடுகள் eurocurency என்ற நாணயத்தை பயன்படுத்தி வந்தன. 2012 ஆம் ஆண்டுகள் முதன் முதலாக இந்த வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டன. அதுபோல் NBD என்ற வார்த்தையும் பயன்படுத்தப்படுகிறது. No Big Deal என்பதுதான் NBD.
Hangry என்ற புதிய சொல்லும் ஆக்ஸ்போர்டு அகராதியில் சேர்ந்திருக்கிறது. anger (கோபம்) Hunger (பசி) என்ற வார்த்தைகளில் இருந்து Hangry என்ற சொல் பிறந்திருக்கிறது. அதாவது, பசியால் உண்டான கோபம் என்று பொருள். அதேபோல் ஆண்தோழனை குறிக்க Bruh என்ற சொல் சேர்ந்திருக்கிறது. ஒரு பேருந்தில் இருவருக்கான இருக்கையிலும் கால்களை பரப்பிக் கொண்டு அமர்ந்திருப்பதைக் குறிக்க Manspreading என்ற சொல் சேர்க்கப்பட்டிருக்கிறது (Pilling on to the next seat) மிகச் சிறந்ததாக ஒன்றை சொல்ல Awesome sauce மற்றும் abso-bloody-lutely (Something As Excellent) என்ற சொற்கள் புதிதாக சேர்க்கப்பட்டிருக்கின்றன், தொடர்ச்சியாக ஒரு குறிப்பிட்ட நேரத்தில் பீர் குடித்து பழகியிருப்பவர்கள் அந்த பழக்கமான நேரத்தைக் குறிக்க Beer o’ clock என்ற வார்த்தை இணைக்கப்பட்டிருக்கிறது அதுபோல் Wine o’clock.
நமது செல்ஃபோன் மூலம் யாரையாவது தவறி மீண்டும் அழைத்து விட்டால் அதற்கு Butt Dial. கட்டணம் செலுத்தி பூனைபோடு பேசிக் கொண்டு காபி குடிக்கும் இடத்துக்கு Cat café. கழிவுநீர் பாதையில் பெரிய அளவான திடக்கழிவு கெட்டியாக உறைந்து கிடப்பதற்கு Fatberg. அதுபோல் சுருக்கமான நகைச்சுவைப் பேச்சுக்கு Bants என்று 1000 புதிய வாத்தைகளை ஆக்ஸ்போர்டு சேர்த்துக் கொண்டிருக்கிறது. ஸ்மார்போனில் Blouethooth என்ற வசதி உள்ளது. இந்த Bluethooth என்ற வார்த்தை finland என்ற நாட்டை 13 ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்த மன்னனின் நினைவாக கொள்ளப்பட்டது.