குவைத்தில் வெளிநாட்டவர்களுக்கு இனி மருந்துகள் இலவசம் இல்லை! - இன்று முதல் கட்டணம் அமல்

குவைத்தில் வெளிநாட்டவர்களுக்கு இனி மருந்துகள் இலவசம் இல்லை! - இன்று முதல் கட்டணம் அமல்

குவைத்தில் வெளிநாட்டவர்களிடம் இருந்து மருந்துக்கான கட்டணம் வசூலிக்க குவைத் திட்டமிட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளுக்கு 10 தினார்களும், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு 5 தினார்களும் கட்டணம் வசூலிக்க அதிகாரிகளுக்கு சுகாதார அமைச்சர் டாக்டர் அஹ்மத் அல் அவாதி உத்தரவிட்டுள்ளார். இந்த முடிவு இன்று முதல் அமலுக்கு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

முன்பெல்லாம் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகள் வெளிநாட்டவர்களுக்கு இலவசமாக மருந்துகளை வழங்கி வந்தன. புதிய அரசாணையின்படி, வெளிநாட்டினர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள மருந்தகத்தில் மருந்து பெற 5 தினார்களும், மருத்துவமனையில் உள்ள வெளிநோயாளர் மருந்தகத்தில் 10 தினார்களும் செலுத்த வேண்டும்.

தற்போது ஆரம்ப சுகாதார நிலையங்களில் 2 தினார்களும், மருத்துவமனைகளில் 10 தினார்களும் கலந்தாய்வுக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதன் விளைவாக, வெளிநாட்டவர்கள் ஆரம்ப சுகாதார நிலையத்திற்குச் செல்ல ஏழு தினார்களும், அரசு மருத்துவமனைக்குச் செல்ல 20 தினார்களும் செலுத்த வேண்டியிருக்கும். மருந்துகள் வீணாவதைத் தடுக்கவும், சுகாதார சேவைகளை மேம்படுத்தவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

சில குறிப்பிட்ட பகுதிகள் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது, ஆனால் எவை என்பது குறிப்பிடப்படவில்லை. இந்த புதிய முடிவு தமிழர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான சாதாரண வெளிநாட்டினருக்கு பெரும் நெருக்கடியை உருவாக்கும்.