குவைத்தில் விபச்சாரத்தில் ஈடுபட்ட வெளிநாட்டைச் சேர்ந்த 6 பெண்கள் கைது!

குவைத்தில் விபச்சாரத்தில் ஈடுபட்ட வெளிநாட்டைச் சேர்ந்த 6 பெண்கள் கைது!

குவைத் சிட்டி: குவைத்தில் விபச்சாரத்தில் ஈடுபட்ட 6 வெளிநாட்டைச் சேர்ந்த பெண்கள் கைது செய்யப்பட்டனர். உள்துறை அமைச்சகம் மற்றும் மனித கடத்தல் தடுப்பு துறையினர் நடத்திய சோதனையில் அவர்கள் பிடிபட்டனர். சட்டவிரோத நடவடிக்கைகளுக்காக குடியிருப்புகள் மற்றும் வீடுகளை வாடகைக்கு விட்ட ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். அவர்கள் அனைவரும் மேல் நடவடிக்கைக்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.