ரூ.27 கோடி திருமண மஹர் கொடுத்து மணம் முடித்த மணமகன்!

ரூ.27 கோடி திருமண மஹர் கொடுத்து மணம் முடித்த மணமகன்!

இஸ்லாமிய முறைப்படி மணமுடிக்க மணமகன் மணமுடிக்கும் மணமகள் கோரும் மஹர் எனும் நன்கொடையை அளித்து திருமணம் செய்ய வேண்டும். அதனடிப்படையில் வளைகுடா நாடான குவைத் நாட்டைச் சேர்ந்த மணமகன் ஒருவர், தனது திருமண மஹராக 32 லட்சம் டாலர்களை (10 லட்சம் குவைத் தினார்) இந்திய மதிப்பில் ரூ.27 கோடி மணமகளுக்கு கொடுத்து திருமணம் செய்துள்ளார். குவைத் வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட மிக உயர்ந்த திருமண மதிப்பு இதுவாகும் என கூறப்படுகிறது. 

மணமகன் மற்றும் மணமகளின் சமூக நிலையைப் பொறுத்து குவைத்தில் வெவ்வேறு திருமண மதிப்புகள் நிலவுகின்றன. திருமண மதிப்புக்கு குறைந்தபட்ச அல்லது அதிகபட்ச வரம்பு இல்லை. திருமண மதிப்பு திருமண ஒப்பந்தத்தில் பதிவு செய்யப்படலாம் அல்லது பதிவு செய்யப்படாமல் இருக்கலாம். குவைத்தில் திருமண மதிப்பாக ஒரு தினார் முதல் இரண்டரை லட்சம் தினார் வரை வழங்கப்படுவது வழக்கமாகும்.