குவைத் மக்கள் தொகை 4.4 மில்லியன் - இந்தியர்களின் எண்ணிக்கை 1 மில்லியன்

குவைத் மக்கள் தொகை 4.4 மில்லியன் -  இந்தியர்களின் எண்ணிக்கை 1 மில்லியன்

குவைத் சிட்டி: குவைத் சிவில் தகவல் அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, குவைத்தின் மொத்த மக்கள் தொகை 44,64,000 ஆக உள்ளது. இதில் 15 லட்சம் பேர் நாட்டின்  பூர்வீகவாசிகள் மற்றும் 29.5 லட்சம் பேர் வெளிநாட்டினராவர். அதாவது மக்கள்தொகை விகிதத்தில் 35 சதவீதம் பேர் பூர்வீக குடிகளாகவும், 65 சதவீதம் பேர் வெளிநாட்டினராகவும் உள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளில், பூர்வீக மக்களின் எண்ணிக்கை அதிகரித்தும், வெளிநாட்டு மக்கள் தொகை குறைந்துள்ளதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. எனினும் வெளிநாட்டினர் தான் மக்கள் தொகையில் பெரும்பான்மையாக உள்ளனர்.

வெளிநாட்டினரில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் இந்தியர்கள் ஆவர். நாட்டின் ஃபர்வானியா மாகாணம் தான் அதிக மக்கள்தொகை கொண்ட பகுதியாகும். குவைத் சிவில் தகவல்களின்படி, பூர்வீகவாசிகள் மற்றும் வெளிநாட்டினர் உட்பட 11 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ஃபர்வானியாவில் வசிக்கின்றனர். மக்கள் தொகை அடர்த்தியின் அடிப்படையில் அஹ்மதி கவர்னரேட் இரண்டாவது இடத்திலும், ஹவாலி மூன்றாவது இடத்திலும் உள்ளது.