பஹ்ரைன் பட்டத்து இளவரசர் சல்மான் பிரதமராக பதவியேற்பு!
பஹ்ரைன் பிரதமராக அந்நாட்டின் பட்டத்து இளவரசர் சல்மான் பின் ஹமத் அல் கலீஃபா பதவியேற்றார். புதிய அமைச்சரவை அமைப்பதன் ஒரு பகுதியாக, அவர் தனது ராஜினாமா கடிதத்தை அரசர் ஹமாத்திடம் நேற்று சமர்ப்பித்தார்.
பதவியேற்பு விழா மன்னர் ஹமாத் முன்னிலையில் நடந்தது. துணைப் பிரதமர்கள் மற்றும் அமைச்சர்கள் பதவியேற்றனர். சாகிர் அரண்மனையில் விழா நடைபெற்றது. புதிதாக பதவியேற்ற பிரதமர், துணைப் பிரதமர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு மன்னர் ஹமாத் வாழ்த்து தெரிவித்தார்.