பஹ்ரைனில் 29 வயதான வெளிநாட்டவருக்கு குரங்கு காய்ச்சல்..!

பஹ்ரைனில் 29 வயதான வெளிநாட்டவருக்கு குரங்கு காய்ச்சல்..!

பஹ்ரைனில் குரங்கு காய்ச்சலின் முதல் தொற்று  உறுதி படுத்தப்பட்டுள்ளதாக  சுகாதார அமைச்சகத்தை மேற்கோள் காட்டி அந்நாட்டின்  செய்தி நிறுவனமான பிஎன்ஏ வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

BNA வெளியிட்டுள்ள  அறிக்கையின்படி, 29 வயதான ஆண் ஒருவருக்கு வெளிநாட்டில் தொற்று ஏற்பட்டுள்ளது. பஹ்ரைனின் சுகாதார அமைச்சகம், அந்த நபர் வெளிநாட்டில் இருந்து  பஹ்ரைனுக்கு திரும்பியபோது, ​​அவரது உடலில் ஏற்பட்ட அறிகுறிகள் சந்தேகிக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டதில்  அவருக்கு குரங்கு காய்ச்சலின் தொற்று உறுதி செய்யப்பட்டதாக அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.