குவைத்தில் குடியிருப்பு பகுதிகளிலிருந்து பேச்சிலர்ஸ் வெளியேற்றம்!

குவைத்தில் குடியிருப்பு பகுதிகளிலிருந்து பேச்சிலர்ஸ் வெளியேற்றம்!

குவைத் சிட்டி: குவைத்தில் பூர்வீக  மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளில் உள்ள பேச்சிலர்ஸ்களை வெளியேற்றும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் கட்டிடங்களில் மின் இணைப்புகள் ரத்து செய்யப்படுவது தொடர்கிறது. கடந்த ஒரு மாதத்தில், ஃபர்வானியா கவர்னரேட்டில் சுமார் 100 கட்டிடங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

கோப்பு படம்

சுதேசி குடியிருப்புப் பகுதிகளில் வெளிநாட்டு பேச்சிலர்ஸ் தங்கக் கூடாது என்றும், முன்கூட்டியே வெளியேறுமாறும் எச்சரிக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த ஆய்வுகளை உள்துறை அமைச்சகம், சிவில் தகவல் துறை மற்றும் நீர்மின் அமைச்சகம் இணைந்து நடத்துகின்றன. 

நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் பூர்வீக குடியிருப்பு பகுதிகளில், தங்கள் குடும்பத்துடன் வசிக்காத வெளிநாட்டினரை (பேச்சிலர்ஸ்) முழுமையாக வெளியேற்றுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. 

பேச்சிலர்ஸ் குடியிருப்புகளில் அளவுக்கதிகமாக போதைப்பொருள் மற்றும் மதுப் பாவனை அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனடிப்படையில் நாடு முழுவதும் விரிவான ஆய்வுக்கு அதிகாரிகள் தயாராகி வருகின்றனர்.

கோப்பு படம்

பூர்வீக குடியிருப்பு பகுதிகளில் பேச்சிலர்ஸ் இருப்பதற்குக் காரணம், கட்டிட உரிமையாளர்கள் அடுக்குமாடி குடியிருப்புகளை பல்வேறு பகுதிகளாகப் பிரித்து, வெளிநாட்டவர்களுக்கு வழங்கி நிதி ஆதாயம் தேடியதுதான் காரணம் என்றும், இதுபோன்ற கட்டிட உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.