குவைத் இந்திய தூதராக டாக்டர். ஆதர்ஷ் ஸ்வைகா நியமனம்

குவைத் இந்திய தூதராக டாக்டர். ஆதர்ஷ் ஸ்வைகா  நியமனம்

குவைத் சிட்டி: குவைத்துக்கான இந்திய தூதராக டாக்டர். ஆதர்ஷ் ஸ்வைகா அடுத்த வாரம் பொறுப்பேற்க உள்ளார்.  இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவிடம் இருந்து அதிகார கடிதத்தைப் பெற்ற டாக்டர். ஆதர்ஷ் சைக்வா, தற்போது வெளியுறவு அமைச்சகத்தின் இணைச் செயலாளராகப் பணிபுரிந்து வருகின்றார். 

முன்னதாக குவைத்துக்கான இந்திய தூதராக இருந்த சிபி ஜார்ஜ் ஜப்பானுக்கு செய்யப்பட்ட நிலையில், குவைத் இந்திய தூதராக ஆதர்ஷ் சைக்வா நியமிக்கப்பட்டுள்ளார். 

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகள் மற்றும் நோக்கங்களை மேம்படுத்தவும், இந்தியா-குவைத் இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்தவும் பாடுபடுவேன் என்று டாக்டர். ஆதர்ஷ் ஸ்வைகா ட்வீட் செய்துள்ளார்.