இந்திய பயணியை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய எதிஹாத் ஏர்வேஸ்..!

இந்திய பயணியை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய எதிஹாத் ஏர்வேஸ்..!

இந்தியாவில் இருந்து அபுதாபிக்கு விமானத்தில் பயணித்த பயணி மற்றும் குடும்பத்தினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது எதிஹாத் ஏர்வேஸ்.  

எதிஹாத் EY 205 இல் மும்பையிலிருந்து அபுதாபிக்கு பயணித்த இந்தியர் எதிஹாத் நிறுவனத்திற்கு மிகவும் முக்கியமான நபராகிப் போனார். ஏனெனில், இந்த ஆண்டு இதுவரை எதிஹாத்தில் பயணம் செய்தவர்களின் எண்ணிக்கை ஒரு மில்லியனை எட்டியது அவர் மூலமாகத்தான்.

 எதிஹாத் பயணிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் கேக் மற்றும் ரிட்டன் டிக்கெட்டை பரிசாக அளித்தது.  மேலும் இந்த அழகான தருணங்களை படம்பிடிக்க எதிஹாத் கெஸ்ட்டுக்கு கோல்டன் மெம்பர் மற்றும் போலராய்டு கேமராவை ஊழியர்கள் அன்பளிப்பாக வழங்கினர். 

எதிஹாத் ஏர்வேஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அன்டோனோவால்டோ நீவ்ஸ், "10 லட்சம் பயணிகள் என்ற மைல்கல்லை எட்ட உதவிய அனைத்து பயணிகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்." என தெரிவித்துள்ளார்.