தொழிலாளிக்கு ரூ.1.35 கோடி இழப்பீடு வழங்க அபுதாபி நீதிமன்றம் உத்தரவு

தொழிலாளிக்கு ரூ.1.35 கோடி இழப்பீடு வழங்க அபுதாபி நீதிமன்றம் உத்தரவு

அபுதாபி: ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பணிபுரியும் போது மின் பெட்டி வெடித்து காயம் அடைந்த இளைஞருக்கு 6 லட்சம் திர்ஹாம் (இந்திய ரூபாய் 1.35 கோடிக்கு மேல்) இழப்பீடாக வழங்கப்பட்டது.

 
அபுதாபி முதன்மை அமர்வு நீதிமன்றம் இந்தத் தொகையை பணியமர்த்திய நிறுவனமும், பணியை நியமித்த பொறியாளரும் செலுத்த வேண்டும் என்று தீர்ப்பளித்தது.  மின்சார பெட்டி வெடித்ததில் அந்த இளைஞரின் முகம் மற்றும் பிற உடல் பாகங்களில் பலத்த தீக்காயம் ஏற்பட்டது.

 அபுதாபியில் பணிபுரிந்து வரும் வெல்டர் ஒருவர், நீதிமன்றத்தை அணுகினார். அவர் தனது மனுவில், தான் பொறியாளரின் கீழ் பணிபுரிந்து வருவதால், ஒருநாள் பணியின் போது, ​​மின்பெட்டியை திறந்து சோதனை செய்யும்படி பொறியாளர் கூறியுள்ளார்.  ஆனால், இந்த முறை பெட்டிக்கான மின்சாரம் துண்டிக்கப்படவில்லை.  சோதனை செய்யும் போது, ​​பெட்டி வெடித்து, முகம், உடல் மற்றும் வலது கையில் பலத்த தீக்காயம் ஏற்பட்டது எனவும், ஆகவே 30 லட்சம் திர்ஹாம் இழப்பீடு மற்றும் 12 சதவீத வட்டியை அந்த நிறுவனம் மற்றும் தான் பணிபுரிந்த பொறியாளரிடம் இருந்து தர உத்தரவிட வேண்டும் என்று கோரி நீதிமன்றத்தை அணுகினார்.  

முன்னதாக இளைஞனின் முகம், கழுத்து, மார்பு மற்றும் கைகளில் தீக்காயங்கள் இருந்ததாகவும் தடயவியல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  வழக்கை விரிவாக விசாரித்த நீதிமன்றம், நிறுவனம் மற்றும் பொறியாளருக்கு 6 லட்சம் திர்ஹாம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது.