துபாயில் லுலு ஹைப்பர் மார்க்கெட் பொருட்களை அமேசானில் ஆர்டர் செய்யலாம்..!
அபுதாபி: இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் மற்றும் லுலு (LuLu) குழுமம் கைகோர்க்கிறது. லுலு ஹைப்பர் மார்க்கெட்டில் இருந்து மளிகை, பழங்கள் மற்றும் காய்கறி பொருட்களை இப்போது Amazon மூலம் ஆர்டர் செய்யலாம்.
முதல் கட்டமாக, லுலு ஹைப்பர் மார்க்கெட்டின் தயாரிப்புகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள அமேசான் மூலம் வாடிக்கையாளர்களைச் சென்றடையும். இரண்டாவது கட்டத்தில், மற்ற GCC நாடுகள் மற்றும் எகிப்துக்கு ஒத்துழைப்பு நீட்டிக்கப்படும்.
அபுதாபி பொருளாதார துறை தலைவர் முஹம்மது அலி அல் ஷோராபா முன்னிலையில், லுலு குழும தலைவர் எம்.ஏ. யூசுப் அலி மற்றும் அமேசான் மத்திய கிழக்கு துணைத் தலைவர் ரொனால்டோ மொச்சவர் ஆகியோர் இது தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில், அமேசான் ஆரம்பத்தில் துபாய் மெரினா, பர்ஷா, பாம் ஜுமைரா மற்றும் அரேபியன் ரேஞ்சர்ஸ் ஆகிய இடங்களுக்கு அமேசான் இந்த சேவையை துவங்கும். இது பின்னர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும். சிறந்த ஷாப்பிங் அனுபவத்தை வழங்க அமேசானுடன் ஒத்துழைப்பதாக எம்ஏ யூசுப் அலி கூறினார்.
லுலு குழுமத்தின் முதன்மை செயல் அதிகாரி சைஃபி ரூபாவாலா, செயல் இயக்குநர் எம்.ஏ. அஷ்ரப் அலி ஆகியோர் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.