ஹத்தாவில் அமையும் வளைகுடாவின் முதல் நீர்மின் நிலையம் - 60% கட்டுமானப் பணிகள் நிறைவு!
துபாய்: துபாய் ஹத்தாவில் பெரிய நீர்மின் நிலையத்தின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் 60 சதவீத கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளதாக துபாய் நீர் மற்றும் மின்சாரத்துறை (DEWA) அதிகாரிகள் அறிவித்துள்ளனர். சிறந்த சுற்றுலா மையமாக மாறும் ஹத்தாவின் வளர்ச்சிக்கு நீர்மின் நிலையம் திட்டம் வலுவூட்டும்.
துபாய் ஹத்தாவில் 1.42 பில்லியன் திர்ஹாம் செலவில் நீர்மின் நிலையம் கட்டப்படுகிறது. இப்பகுதியின் விரிவான வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்ட திட்டங்களில் இதுவும் ஒன்று. இத்திட்டம் 250 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்டது. இந்த மின் ஆலை 80 ஆண்டுகள் குறையில்லாமல் செயல்படும் திறன் கொண்டது என மதிப்பிடப்பட்டுள்ளது. 2024 முதல் காலாண்டில் ஆலையின் கட்டுமானப் பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வளைகுடா பிராந்தியத்தில் வேறு எந்த நீர் மின் ஆலையும் இல்லை. மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தவும், ஹத்தாவின் பின்தங்கிய வளர்ச்சிக்கு தீர்வு காணவும் பல திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தால் அமையப்பெறும் சுற்றுலா திட்டங்களால் அப்பகுதி மக்கள் பெரிதும் பயனடைவார்கள்.