ஜிசிசி கவுன்சிலின் 40வது ஆண்டு விழா; சிறப்பு தபால் தலையை வெளியிட்ட யுஏஇ..!
வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (ஜிசிசி) நிறுவப்பட்டு 40 ஆண்டுகள் நிறைவடைந்ததை நினைவுகூரும் வகையில், ஐக்கிய அரபு அமீரகம் சிறப்பு தபால் தலையை வெளியிட்டுள்ளது. எமிரேட்ஸ் போஸ்ட் வளைகுடா முழுவதும் உள்ள அஞ்சல் குழுக்களுடன் இணைந்து முத்திரையை அறிமுகப்படுத்தியது. முத்திரையில் சவுதி அரேபியா, பஹ்ரைன், கத்தார், குவைத் மற்றும் ஓமன் ஆகிய ஜிசிசி நாடுகளின் தலைவர்கள் படங்கள் மற்றும் கொடிகள் உள்ளன.
1981 ஆம் ஆண்டு அபுதாபி இன்டர்காண்டினென்டல் ஹோட்டலில் நடைபெற்ற உச்சிமாநாட்டில் சங்கம் தொடங்கியது. முத்திரையில் GCC இன் லோகோவும் சேர்க்கப்பட்டுள்ளது.