யு.ஏ.இ: புதிய வேலை இழப்பு நிதி உதவி காப்பீடு பதிவு செய்யாத தொழிலாளர்களுக்கு அபராதம்!

யு.ஏ.இ: புதிய வேலை இழப்பு நிதி உதவி காப்பீடு பதிவு செய்யாத தொழிலாளர்களுக்கு அபராதம்!

துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தின் புதிய வேலை இழப்பு நிதி உதவி காப்பீடு திட்டத்தில் சேராத தொழிலாளர்களுக்கு 400 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும். இந்த காப்பீடு திட்டம் என்பது நிறுவனம் திவாலாகிவிட்டாலோ அல்லது வணிகத்திலிருந்து வெளியேறினாலோ ஊழியர்களுக்கு நிதிப் பாதுகாப்பை வழங்கும் திட்டமாகும். இதில் பங்கேற்காதவர்களுக்கே அபராதம் என தொழிலாளர் புகார் துறை தலைவர் டாக்டர் அகமது அல்காரா தெரிவித்தார்.

காப்பீட்டுத் தொகையை தவணை முறையில் செலுத்தும் பணியாளர்கள், 3 மாதங்களுக்கு மேல் தொகை நிலுவையில் இருந்தால், கூடுதலாக 200 திர்ஹம் அதிகமாகச் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முதலீட்டாளர்கள், சுயதொழில் செய்பவர்கள், வீட்டு வேலை செய்பவர்கள், தற்காலிக ஒப்பந்தத் தொழிலாளர்கள், 18 வயதுக்குட்பட்டவர்கள், ஒரு வேலையில் இருந்து ஓய்வு பெற்று வேறு வேலையில் சேர்ந்தவர்கள் இத்திட்டத்தில் சேரத் தகுதியற்றவர்கள். ஆனால் கமிஷன் அடிப்படையில் பணிபுரிபவர்கள் திட்டத்தில் சேரலாம்.

காப்பீட்டு நிறுவனங்களின் குழுவின் இணையதளம் , ஸ்மார்ட் அப்ளிகேஷன், வங்கி ஏடிஎம்கள், கியோஸ்க் இயந்திரங்கள், வணிக சேவை மையங்கள், பணப் பரிமாற்ற நிறுவனங்கள், டு, எதிசலாட், எஸ்.எம்.எஸ். போன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மற்றும் மனித அமைச்சகத்தால் தீர்மானிக்கப்படும் பிற சேனல்கள் மூலம் காப்பீட்டுத் திட்டத்தில் உறுப்பினராகச் சேரலாம்.

இந்த காப்பீட்டை யார் வழங்குவார்கள்?

MoHRE இன் படி பின்வரும் காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் இந்த திட்டத்தில் இணையலாம்.

>> துபாய் இன்சூரன்ஸ் நிறுவனம் Dubai Insurance Company

>> அபுதாபி நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனம் Abu Dhabi National Insurance Company

>> அல் ஐன் அஹ்லியா இன்சூரன்ஸ் நிறுவனம் Al Ain Ahlia Insurance Company

>> எமிரேட்ஸ் இன்சூரன்ஸ் நிறுவனம் Emirates Insurance Company

>> தேசிய பொது காப்பீட்டு நிறுவனம் National General Insurance Company

>> ஓரியண்ட் இன்சூரன்ஸ் Orient Insurance

>> அபுதாபி நேஷனல் தக்காஃபுல் நிறுவனம் Abu Dhabi National Takaful Company

>> ஓமன் இன்சூரன்ஸ் நிறுவனம் Oman Insurance Company

>> ஓரியண்ட் UNB தக்காஃபுல் நிறுவனம்  Orient UNB Takaful Company


இதுதொடர்பான கூடுதல் செய்திகள்: 

ஜனவரி 1 முதல் அமீரகத்தில் பணிபுரியும் அனைவருக்கும் வேலை இழப்பு நிதி உதவி காப்பீடு கட்டாயம்!