துபாய் ரன் (Dubai Run) - பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு!
ஷேக் ஷயீத் சாலையை ஆக்கிரமித்த துபாய் ரன் பங்கேற்பாளர்கள்!
துபாயில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் துபாய் ஃபிட்னஸ் சேலஞ்சின் (Dubai Fitness Challenge) ஒரு பகுதியாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற துபாய் ரன் (Dubai Run) துபாயின் முக்கிய ஷேக் சயீத் சாலையில் நடைபெற்றது.
ஆயிரக்கணக்கான மக்கள் காலை 6.30 மணி முதல் 10 மணி வரை சாலைகளில் இறங்கி ஒடினர். இது உலகின் மிகப்பெரிய ஓட்டங்களில் ஒன்றாக மாறியுள்ளது.
ஆயிரக்கணக்கான பங்கேற்பாளர்களில் துபாயின் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமதுவும் ஒருவர்.
துபாய் ஃபிட்னஸ் சேலஞ்சின் நோக்கத்தின் ஒரு பகுதியாக, மக்கள் மிகவும் சுறுசுறுப்பாக இருக்க ஊக்குவிக்கும் வகையில் இந்த ஓட்டம் நடைபெற்றது. இதற்காக அதிகாலை 4 மணி முதல் காலை 10 மணி வரை அந்த சாலை மூடப்பட்டது.