‘கலர்ஃபுல்’ கத்தார் - அடுத்த 30 நாட்களுக்கு கால்பந்து உலகம் கத்தாரில்!

தோஹா: உலகக் கோப்பை கால்பந்து போட்டி இன்று தொடங்கவுள்ள நிலையில் கத்தார் முழுவதும் பரபரப்பு நிலவுகிறது. எங்கு பார்த்தாலும் தங்களுக்கு பிடித்த அணியின் ஜெர்சி அணிந்த ரசிகர்கள் மட்டுமே உள்ளனர். ஒவ்வொரு கண்ணிலும் கால்பந்து உற்சாகம் மட்டுமே. மெட்ரோ பயணங்களில் கூட கால்பந்து மட்டுமே பேசப்படுகிறது. சிறு குழந்தைகள் கூட தங்களுக்கு பிடித்த அணியின் ஜெர்சி மற்றும் கையில் ஒரு சிறிய கொடியுடன் நடக்கிறார்கள்.
ஃபிஃபா உலகக் கோப்பையை நேரலையில் பார்க்கும் மகிழ்ச்சியே வேறு. உலகக்கோப்பையில் பங்குபெறும் அனைத்து அணிகளும் தோஹா வந்து சேர்ந்துவிட்டன.
கத்தார் மற்றும் ஈக்வடார் அணிகளுக்கு இடையிலான உலகக் கிண்ண தொடக்கப் போட்டியில் புலம்பெயர் சமூகத்தின் பூரண ஆதரவுடன் கத்தாரின் அல்-அன்னாபி களம் இறங்குகிறார்.
கத்தார் குடியிருப்பாளர்கள், வெளிநாட்டவர்கள் மற்றும் உலகக் கோப்பை ரசிகர்கள் ரசிகர் மண்டலங்கள், கடற்கரை கிளப்புகள் மற்றும் ஃபெஸ்டிவல் நடைபெறும் இடங்களை நிரப்பியுள்ளனர். அனைத்து ஷோன்களிலும், ரசிகர்கள் போட்டிகளின் நேரடி ஒளிபரப்பை மாபெரும் திரைகளில் பார்க்கலாம்.
நேற்று மாலை, தோஹா கார்னிச்சில் ஃபிஃபாவின் அதிகாரப்பூர்வ ஃபேன் ஷோ (ரசிகர் விழா) மற்றும் கார்னிவல் அரங்கம் ரசிகர்களுக்காக திறக்கப்பட்டது. தோஹா கார்னிச், ஃபிளாக் பிளாசா மற்றும் கவுண்ட்டவுன் கடிகாரத்தின் முன் பகுதிகள் பிஸியாக உள்ளன. அடுத்த 30 நாட்களுக்கு கால்பந்து உலகம் கத்தாரில் இருக்கும்.