ஏர் அரேபியாவின் ஒரு வருடம் முழுவதும் இலவச 'அன்லிமிடெட் டிக்கெட்டுகளை' வென்ற லக்கி பயணி!
ஷார்ஜாவை சேர்ந்த பட்ஜெட் விமான நிறுவனமான ஏர் அரேபியா, தனது பயணி ஒருவருக்கு, ஒரு வருடத்திற்கு தனது எத்தனை விமானங்களில் வேண்டுமானாலும் பயணிக்க இலவச டிக்கெட்டுகளை வழங்கி அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்த பயணிக்கு இவ்வளவு பெரிய சலுகை ஏன் என்று கேட்டால், ஏர் அரேபியாவின் விமானங்களில் பயணம் செய்தவர்களின் எண்ணிக்கை அவர் மூலம் 10 லட்சத்தை எட்டியது என்பதுதான்.
ஏர் அரேபியா செவ்வாய்கிழமை 10 லட்சம் பயணிகளின் மைல்கல்லை எட்டியது. ஏர் அரேபியா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், அந்த எண்ணை அடைந்த பயணி எதிர்பாராத பரிசால் ஆச்சரியமடைந்ததாக அறிவித்தது. பரிசு வென்றவர் அவர் விரும்பும் இடங்களுக்கு இலவச கட்டணத்தில் பயண டிக்கெட்டுகளைப் பெறுவார் என்றும், அடுத்த ஒரு வருடத்திற்கு அவற்றைப் பயன்படுத்தலாம் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.