4 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு நடைபெறும் ‘மஸ்கட் நைட்ஸ்’
நான்கு வருட இடைவெளிக்குப் பிறகு ‘மஸ்கட் நைட்ஸ்’ நடைபெறும் என அதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். மஸ்கட் நகருக்கு பண்டிகை இரவைக் கொடுக்கும் மஸ்கட் நைட்ஸ் நான்கு அரங்குகளில் நடைபெறும் என்றும் ஏற்பாட்டாளர்கள் செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தனர்.
மஸ்கட் நைட்ஸ் ஜனவரி 19 முதல் பிப்ரவரி 4 வரை, குர்ரம் நேச்சுரல் பார்க், அல் நசீம் பார்க், ஓமன் ஆட்டோமொபைல் அசோசியேஷன் மைதானம் மற்றும் ஓமன் கன்வென்ஷன் மற்றும் கண்காட்சி மையம் ஆகியவற்றில் அரங்கேறுகிறது.
மஸ்கட் நகரசபையின் தலைவர் அஹ்மத் முஹம்மது அல் ஹுமைதி கூறுகையில், ஒவ்வொரு இடத்திலும் மக்களை கவரும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளை அமைப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.
12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு நுழைவு இலவசம். போக்குவரத்தை எளிதாக்கும் வகையில் நான்கு இடங்களில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை தாண்டி, மஸ்கட் நைட்ஸ் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாவை மேம்படுத்துவதற்கும், உள்ளூர் தொழில்களுக்கு ஆதரவளிப்பதற்கும், சமூக மற்றும் கலாச்சார தொடர்புகளுக்கும் ஒரு தளமாக செயல்படும்.