மஸ்கட்டில் மழை..! - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
மஸ்கட்: குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக ஓமன் நாட்டின் பல்வேறு கவர்னரேட்டுகளில் மழை பெய்து வருகிறது. புதன் கிழமை வரை மழை மற்றும் காற்று நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முசந்தம், வடக்கு பத்தினா மற்றும் புரைமி கவர்னரேட்டுகளில் மழை பெய்யும், காற்றின் வேகம் மணிக்கு 30-60 கி.மீ. கடல் சீற்றமாக இருக்கும். அலைகள் அதிகபட்சமாக 2.5 மீட்டரை எட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திங்கட்கிழமை முதல் புதன் வரையிலான மற்றொரு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையின் ஒரு பகுதியாக, வடக்கு மாகாணங்களில் 10 முதல் 50 மி.மீ மழை பெய்யக்கூடும் என்பதால் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.