ஓமனில் 57 வெளிநாட்டவர்கள் உட்பட 121 கைதிகள் விடுவிப்பு!
மஸ்கட்:சுல்தான் ஹைதம் பின் தாரிக் பதவியேற்ற ஆண்டு நிறைவையொட்டி 121 கைதிகளை விடுதலை செய்து ஓமன் அரசு ஆணை பிறப்பித்துள்ளது. பல்வேறு வழக்குகளில் சிறை தண்டனை அனுபவித்து வருபவர்கள் விடுவிக்கப்படுகிறார்கள். விடுவிக்கப்பட்டவர்களில் 57 வெளிநாட்டவர்கள் உள்ளடங்குவதாக ராயல் ஓமன் காவல்துறை தெரிவித்துள்ளது.