கத்தாரில் அதிகமாக நிறுவப்படும் மின்சார சார்ஜிங் நிலையங்கள்..!
கத்தாரில் அதிக மின்சார சார்ஜிங் நிலையங்களை நிறுவ கஹ்ராமா (Kahramaa (Qatar General Electricity and Water Corporation) திட்டமிட்டுள்ளது. இந்த ஆண்டு 150 மின்சார சார்ஜிங் நிலையங்கள் நிறுவப்படும். கத்தார் ஜெனரல் எலெக்ட்ரிசிட்டி மற்றும் வாட்டர் கார்ப்பரேஷன் கார்பன் உமிழ்வைக் குறைப்பதற்கான அதன் நிலைத்தன்மைக் கொள்கையின் ஒரு பகுதியாக புதிய சார்ஜிங் நிலையங்களை நிறுவுகிறது.
உலகக் கோப்பைக்கு முன்னதாக, கத்தாரில் 100 மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன. இந்த ஆண்டு 150 புதிய சார்ஜிங் நிலையங்கள் நிறுவப்படும். 2025-க்குள் 1,000 பாஸ்ட் சார்ஜிங் நிலையங்களாக நெட்வொர்க்கை விரிவுபடுத்துவதே இதன் நோக்கம். வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் மற்றும் போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு அமைச்சகத்துடன் இணைந்து நாடு முழுவதும் மின்சார சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன.