கத்தார் ஹயா கார்டு நுழைவு இன்றுடன் நிறைவு!

கத்தார் ஹயா கார்டு நுழைவு இன்றுடன் நிறைவு!

தோஹா: ஹயா கார்டைப் பயன்படுத்தி கத்தாருக்கான நுழைவு இன்றுடன் முடிவடையும் அதேநேரத்தில், முன்கூட்டியே வருகை தந்தவர்கள் ஜனவரி 23, 2023 வரை கத்தாரில் தங்க அனுமதிக்கப்படுகிறார்கள்.

வெளி நாடுகளில் இருந்து உலகக் கோப்பை போட்டி டிக்கெட் வைத்திருப்பவர்கள் நுழைவதற்கு ஹயா கார்டு அல்லது ஃபேன் ஐடி (ரசிகர் அட்டை) கட்டாயமாக்கப்பட்டது. ஹயா அட்டைகள் வெளிநாட்டினருக்கான நுழைவு விசாவாகவும் இருந்தது. நாட்டில் வசிப்பவர்கள் போட்டியைக் காண மைதானங்களுக்குள் நுழைய ஹயா அட்டையும் கட்டாயமாக்கப்பட்டது.

கத்தாரில், ஹயா கார்டு வைத்திருப்பவர்களுக்கு பொது போக்குவரத்து வசதிகளில் இலவச பயணம் மற்றும் அரசு மருத்துவமனைகளில் இலவச அவசர சிகிச்சை உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்பட்டன.

மேலும், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஓமன் உள்ளிட்ட நாடுகளும் ஹயா அட்டை வைத்திருப்பவர்களுக்கு நுழைவதற்கு அனுமதி அளித்தன என்பது குறிப்பிடத்தக்கது.