FIFA ரசிகர்களுக்காக தோஹா வந்தடைந்த ‘வேர்ல்ட் யூரோபா’ மிதக்கும் ஹோட்டல்!

FIFA ரசிகர்களுக்காக தோஹா வந்தடைந்த ‘வேர்ல்ட் யூரோபா’ மிதக்கும் ஹோட்டல்!

FIFA உலகக் கோப்பை கத்தார் 2022 ரசிகர்களுக்கு ஒரு தனித்துவமான விருந்தோம்பல் அனுபவத்தை வழங்குவதற்காக MSC வேர்ல்ட் யூரோபா (மிதக்கும் ஹோட்டல்) கப்பல் நேற்று தோஹா துறைமுகத்தில் நிலைநிறுத்தப்பட்டது.

22 அடுக்குகளைக் கொண்ட இந்தக் கப்பலில் 6,700 உலகக் கோப்பை ரசிகர்கள் தங்கலாம். இது பாதுகாப்பின் மிக உயர்ந்த தரத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. 2, 626 அறைகள் மற்றும் 40,000 மீ  2 பொதுத்தளத்தை கொண்டுள்ளது. 

இந்த கப்பல் அதன் விருந்தினர்களை ஒரு சுற்றுப்பயணத்திற்கு அழைத்துச் செல்லும், அதில் அவர்கள் 33 உணவகங்கள் மற்றும் ஓய்வறைகள் மூலம் உலகெங்கிலும் உள்ள வெவ்வேறு உணவுகள் மற்றும் பானங்களை அனுபவிக்கலாம். 

இசை நிகழ்ச்சிகள், நாடக நிகழ்ச்சிகள்,  அனைத்து வயதினருக்கும் ஏற்ற பொழுதுபோக்கு அம்சங்களுடன் கப்பல் உள்ளது.

கப்பலில் 7 நீச்சல் குளங்கள், 13 நீர்ச்சுழல்கள் மற்றும் பொது இடங்கள், வெளிப்புற பகுதிகள் மற்றும் அறைகள் அடங்கிய மிக ஆடம்பரமான படகு கிளப் ஆகியவற்றை வழங்குகிறது.

MSC World Europa என்பது, உலகின் தூய்மையான எரிபொருளில் ஒன்றான திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) மூலம் இயக்கப்படும் MSC முதல் கப்பலாகும், இது சர்வதேச கப்பல் நடவடிக்கைகளில் இருந்து கார்பன் வெளியேற்றத்தை குறைப்பதில் அல்லது பூஜ்ஜியத்திற்கு கொண்டு வருவதில் முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.