குவைத்தில் கடந்த ஆண்டில் 268 இணையதளங்களுக்கு தடை!

குவைத்தில் கடந்த ஆண்டில் 268 இணையதளங்களுக்கு தடை!

குவைத்தில் கடந்த ஆண்டு 268 இணையதளங்கள் தடை செய்யப்பட்டதாகவும், 30 இணையதளங்கள் திரும்பப் பெறப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப ஒழுங்குமுறை ஆணையம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. மேலும், அறிவுசார் சொத்துரிமை மற்றும் வெளியீட்டு உரிமை மீறல் காரணமாக 193 தளங்கள் முடக்கப்பட்டுள்ளன. 

குவைத் சட்டங்கள் மற்றும் இஸ்லாமிய கொள்கைகளுக்கு இணங்காததற்காக 52 இணையதளங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், மென்பொருள், பொருத்தமற்ற உலாவி உள்ளடக்கம் மற்றும் மோசடி காரணமாக 23 இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.