மெஸ்ஸிக்கு உயரிய ‘பிஷ்ட்’ அணிவித்து கவுரவப்படுத்திய கத்தார் அமீர்..!

மெஸ்ஸிக்கு உயரிய ‘பிஷ்ட்’ அணிவித்து கவுரவப்படுத்திய கத்தார் அமீர்..!

கத்தார் லுசைல் ஸ்டேடியத்தில் அர்ஜென்டினாவின் கேப்டன் மெஸ்ஸிக்கு FIFA உலகக் கோப்பை கோப்பையை வழங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, கத்தார் அமீர் ஷேக் தமிம் பின் ஹமத் அல் தானி உயரிய அழகான அரேபிய ‘பிஷ்ட்’ அணிவித்து கவுரவப்படுத்தினார்.

‘பிஷ்ட்’ என்பது சிறப்பு சந்தர்ப்பங்களில் மட்டுமே அணியும் கத்தாரி கவுன் ஆகும். இது ஒட்டகம் மற்றும் ஆட்டின் முடியால் ஆனது. ஆட்சியாளர்களைத் தவிர, உயர் குடும்பங்களின் ஷேக்குகளும் திருமணம், பெருநாள் தொழுகை மற்றும் ஜும்ஆ தொழுகைகளுக்கு இதை அணிவார்கள். வெள்ளிக்கிழமை குத்பாவை நடத்தும் இமாம்களும் இந்த அரச அங்கியை அணிய அனுமதிக்கப்படுகிறார்கள். அதனை மெஸ்ஸிக்கு அணிவித்து கத்தார் ஆட்சியாளர் கவுரப்படுத்தியுள்ளார்.