நிலநடுக்கத்திற்கு சில வினாடிகளுக்கு முன்பு பயனர்களை எச்சரித்த ஆண்ட்ராய்டு போன்கள்!

நிலநடுக்கத்திற்கு சில வினாடிகளுக்கு முன்பு பயனர்களை எச்சரித்த ஆண்ட்ராய்டு போன்கள்!

கலிபோர்னியாவில் உள்ள ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயனர்கள் செவ்வாய்கிழமை நிலநடுக்கம் ஏற்படுவதற்கு சில வினாடிகளுக்கு முன் எச்சரிக்கை செய்யப்பட்டனர். 

அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் இத்தகைய விழிப்பூட்டல்களுக்காக 'மைஷேக்' செயலியை உருவாக்கினர்.  2020ல், கலிபோர்னியாவில் உள்ள ஆண்ட்ராய்டு சாதனங்களுக்கு நேரடியாக அந்த விழிப்பூட்டல்களை அனுப்பும் தொழில்நுட்பத்தை கூகுள் பயன்படுத்தத் தொடங்கியது. 

அந்த எச்சரிக்கையின் ஸ்கிரீன் ஷாட்டைப் பகிர்ந்த கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, "அலர்ட் சற்றுமுன் வந்தது... அனைவரும் நலமாக இருப்பதாக நம்புகிறேன்" என்று ட்வீட் செய்துள்ளார்.