ஸ்மார்ட் ஃபோன்களில் இருந்து வெளிவரும் நீல ஒளி, பெண் குழந்தைகள் முன்கூட்டியே பருவமடைய வழிவகுக்கும்: ஆய்வு

ஸ்மார்ட் ஃபோன்களில் இருந்து வெளிவரும் நீல ஒளி, பெண் குழந்தைகள் முன்கூட்டியே பருவமடைய வழிவகுக்கும்: ஆய்வு

புதிய ஆராய்ச்சியின் படி, ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்டுகள் பெண் குழந்தைகளின் பருவமடைதலை முன்கூட்டியே விரைவாக்குகின்றன என ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது. இந்த ஸ்மார்ட் சாதனங்கள் நீல ஒளியை வெளியிடுகின்றன. நீல ஒளி-உமிழும் சாதனங்கள் இனப்பெருக்க ஹார்மோன்களுக்கு எரிபொருளாகவும் கருப்பையில் உடல் மாற்றங்களைத் தூண்டுவதாகவும் ஆய்வு தெரிவிக்கிறது. 

மனிதர்களிடம் உருவாகும் மெலடோனின் என்பது ஒருவகையான ஹார்மோன் ஆகும். இது தூக்க சுழற்சியைக் கட்டுப்படுத்த உதவுகிறது மற்றும் குழந்தைகளில் பருவமடைவதை தாமதப்படுத்துகிறது. ஆனால் நீல ஒளி மெலடோனின் அளவை குறைக்கிறது. இதன் விளைவாக முன்கூட்டிய பருவமடைதல் ஏற்படுகிறது.

அதேபோல் ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துவதன் விளைவாக குறையும் மெலடோனின் ஒடுக்கம் எதிர்கால கருவுறுதலையும் பாதிக்கும் என்றும் அந்த ஆராய்ச்சி கூறுகிறது.

கொரோனா ஊரடங்கு காலத்தில் குழந்தைகளிடம் அதிகரித்த செல்போன் பயன்பாடு மற்றும் எலிகள் மூலம் நடத்தப்பட்ட ஆய்வு மூலம் இது உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன். இந்த ஆராய்ச்சி முடிவுகள் 60 வது ஆண்டு ஐரோப்பிய சங்கத்தின் குழந்தை எண்டோகிரைனாலஜி கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது.