பேரீச்சம்பழ கொட்டை எரிபொருளைப் பயன்படுத்தி முதல் பசுமை பேருந்தை இயக்கிய ஓமன் பல்கலைக்கழகம்!

மஸ்கட்: பேரீச்சம்பழத்தின் கொட்டையிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட உயிரி எரிபொருளைப் (டேட் கர்னல் ஆயில்) பயன்படுத்தி இயக்கப்படும் பேருந்தின் (பசுமை பேருந்து) பொது போக்குவரத்தின் முதல் சோதனை ஓட்டத்தை சுல்தான் கபூஸ் பல்கலைக்கழகம் (SQU) நடத்தியது.
அல் கௌத்தில் உள்ள சுல்தான் கபூஸ் பல்கலைக்கழக கலாச்சார மையத்திற்கும் அல் ஆலம் அரண்மனைக்கும் இடையே, சுல்தான் கபூஸ் தெரு வழியாக சென்று திரும்பும் வகையில் பசுமை பேருந்தின் பொது போக்குவரத்து பயணம் அமைந்துள்ளது.
மறுசுழற்சி செய்யக்கூடிய இரசாயன வினையூக்கியைப் பயன்படுத்தி டேட் கர்னல் எண்ணெயில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட பயோடீசலை உற்பத்தி செய்வதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.
பல தொழில்களில் பயன்படுத்தப்படும் கிளிசரால் மற்றும் சோல்கெட்டல் போன்ற துணை தயாரிப்புகளை தயாரிப்பதற்கான கூடுதல் பரிசோதனைகளை மேற்கொள்வதோடு, முதல் 100 லிட்டர் பயோடீசலை உற்பத்தி செய்வதற்கான இரண்டாம் கட்ட பணிகளுக்கு ஆராய்ச்சி குழு திட்டமிட்டுள்ளது.
இந்த திட்டம் பூஜ்ஜிய கார்பன் நடுநிலையை அடைவதற்கும், பொருளாதார வளர்ச்சிக்கான வாய்ப்புகளை உருவாக்குவதற்கு ஆதரவளிக்கும் புதுப்பிக்கத்தக்க மற்றும் நிலையான ஆதாரங்களைக் கண்டறிவதற்கும் பயன்படும் என பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.