உலகின் பாதுகாப்பான நாடு பட்டியலில் 5வது ஆண்டாக கத்தார் முதலிடம்!
தொடர்ந்து 5வது முறையாக இந்த ஆண்டும் உலகின் பாதுகாப்பான நாடாக கத்தார் முதலிடம் பெற்றுள்ளது. Numbeo குற்றத்தடுப்பு குறியீட்டு பட்டியலில், கத்தார் 2018 முதல் முதலிடத்தில் உள்ளது. ஐக்கிய அரபு அமீரகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. நான்கு வளைகுடா நாடுகள் முதல் பத்து இடங்களில் உள்ளன. ஓமன் ஐந்தாவது இடத்திலும், பஹ்ரைன் பத்தாவது இடத்திலும் உள்ளன. பாதுகாப்பான நகரங்களில் அபுதாபி முதலிடத்திலும், தோஹா இரண்டாவது இடத்திலும் உள்ளன.
அஜ்மான், ஷார்ஜா, துபாய், மஸ்கட் போன்ற வளைகுடா நகரங்களும் முன்னணியில் உள்ளன. இதற்கிடையில், வெனிசுலா மிகவும் பாதுகாப்பற்ற நாடாக பட்டியலில் உள்ளது.