மும்பை-மஸ்கட் சேவையை துவக்கிய ‘விஸ்தரா’ ஏர்லைன்ஸ்

மும்பை-மஸ்கட் சேவையை துவக்கிய ‘விஸ்தரா’ ஏர்லைன்ஸ்

இந்தியாவில் இருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு தனது விமான சேவைகளை விரிவுபடுத்த விஸ்தாரா ஏர்லைன்ஸ் திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக மும்பை-மஸ்கட் தினசரி சேவை தொடங்கப்பட்டுள்ளதாக விஸ்தாரா சிஇஓ வினோத் கண்ணன் தெரிவித்தார்.

ஏற்கனவே அபுதாபி, ஜித்தாவுக்கு சேவையை தொடங்கியுள்ள விஸ்தாரா இப்போது மஸ்கட்டிற்கும் தனது சேவையை துவக்கியுள்ளது.

டாடா குழுமம் மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் கூட்டு நிறுவனமான விஸ்தாரா, அதிகரித்துள்ள தேவையை பூர்த்தி செய்ய அதன் நெட்வொர்க்கை விரிவுபடுத்துகிறது. நான்கு மாதங்களில் விஸ்தாரா நெட்வொர்க்கில் சேர்க்கப்படும் மூன்றாவது வளைகுடா நகரம் மஸ்கட் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.