கச்சா இடங்களில் கிரிக்கெட் விளையாடுபவர்களுக்கு மஸ்கட் நகராட்சி எச்சரிக்கை!

கச்சா இடங்களில் கிரிக்கெட் விளையாடுபவர்களுக்கு மஸ்கட் நகராட்சி எச்சரிக்கை!

மஸ்கட்: வாதி (பார்க்) மற்றும் கச்சா (காலியிடம்) பகுதிகளில் கிரிக்கெட் விளையாடுபவர்களுக்கு மஸ்கட் நகராட்சி கவுன்சில் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும்,  காலி இடங்கள், கடற்கரைகள், பொது இடங்கள் போன்ற இடங்களில் அனுமதியின்றி கட்டுமானப் பணிகள் அல்லது வேறு எதையும் செய்பவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

மஸ்கட் முனிசிபாலிட்டி காலி இடத்தில் கிரிக்கெட் ஆடுகளம் தயாராகும் படத்தைப் பகிர்ந்து எச்சரிக்கை விடுத்துள்ளது. நகரம் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் உள்ள வாதிகள் மற்றும் காலியான பகுதிகளில் இதுபோன்ற ஆடுகளங்கள் மற்றும் பிற பொழுதுபோக்கு வசதிகள் பரவலாக கட்டப்பட்டு வரும் சூழலில் இந்த எச்சரிக்கை வந்துள்ளது.