சுகாதாரமின்மை! - அபுதாபியில் டீக்கடைக்கு சீல் வைப்பு!

சுகாதாரமின்மை! - அபுதாபியில் டீக்கடைக்கு சீல் வைப்பு!

அபுதாபி: அபுதாபியில் உணவு பாதுகாப்பு விதிமுறைகளில் பல மீறல்கள் கண்டறியப்பட்டதையடுத்து, அபுதாபியில் உள்ள சிற்றுண்டி கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். இந்த நடவடிக்கையை அபுதாபி வேளாண்மை மற்றும் உணவு பாதுகாப்பு ஆணையம் மேற்கொண்டுள்ளது.

இதுகுறித்து, சமூக வலைதளங்கள் மூலம் அதிகாரிகள் அறிக்கையும் வெளியிட்டுள்ளனர். உணவு விடுதியின் செயல்பாடு பொது சுகாதாரத்திற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதிகாரிகள் நடத்திய சோதனையில், அ பல விதிமீறல்கள் இருப்பதை கண்டறிந்தனர். சமையல் அறையில் பூச்சிகள், ஈக்கள் இருந்ததைத் தவிர, சமைத்த உணவுகள் வெவ்வேறு வெப்பநிலையில் வைக்கப்பட்டிருப்பதை ஆய்வுக் குழு கண்டறிந்தது. மேலும் உணவு தயாரிப்பும் சுத்தமாக இல்லை என கூறப்படுகிறது.

அபுதாபியில் மிக உயர்ந்த உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தொடர்ந்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருவதாக அபுதாபி வேளாண்மை மற்றும் உணவு பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. 

எந்தவொரு உணவு விநியோக நிறுவனத்திலும் சட்ட மீறல்கள் இருப்பதைக் கண்டால் 800555 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை அழைக்குமாறு அதிகாரிகள் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.