ஷார்ஜா புத்தக கண்காட்சி நிகழ்ச்சியில் தமிழ்நாடு அமைச்சர் பங்கேற்பு!

ஷார்ஜா புத்தக கண்காட்சி நிகழ்ச்சியில் தமிழ்நாடு அமைச்சர் பங்கேற்பு!

ஷார்ஜாவில் நடைபெறும் 41வது உலக புகழ்பெற்ற புத்தகக் கண்காட்சியில் தமிழ்நாடு பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவிகளுடன், தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டார்.

புத்தகக் கண்காட்சிக்கு வருகை தந்த அவரை அதிகாரிகள் வரவேற்றுக் கவுரவித்தனர். அதைத் தொடர்ந்து அங்கு நடைபெற்ற கலாச்சார நிகழ்விலும் அமைச்சர் கலந்து கொண்டு உரையாற்றினார். இதில் சுமார் 500க்கும் மேற்பட்ட தமிழ் குடும்பத்தினர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் நடைபெற்ற பல்வேறு தமிழ் கலாசார நிகழ்ச்சிகளை தமிழ்நாடு அமைச்சர் அன்பில் மகேஷ் ஆர்வமாகக் கண்டு ரசித்தார்.

***********************

தகவல்:

ஷார்ஜா புத்தக கண்காட்சியில் அரங்கு எண் 07ல் உள்ள இந்திய புத்தக அரங்குகளில் தமிழ் புத்தகங்கள் கிடைக்கும். காலச்சுவடு மற்றும் சிக்ஸ்த் சென்ஸ் பதிப்பகங்களில் தமிழ் புத்தகங்கள் கிடைக்கும்.