மஸ்கட்-கண்ணூர் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸில் லக்கேஜ் சலுகை அறிவிப்பு!
மஸ்கட்: ஓமன் தேசிய தினத்தை முன்னிட்டு மஸ்கட்டில் இருந்து கண்ணூர் செல்லும் பயணிகளுக்கு கூடுதல் பேக்கேஜ் சலுகைகளை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அறிவித்துள்ளது.
இலவச பேக்கேஜ் வரம்பு 10 கிலோ அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த மாத இறுதி வரை ஏழு கிலோ ஹேண்ட் லக்கேஹூடன் 40 கிலோ எடையுள்ள பேக்கேஜ்களை எடுத்துச் செல்ல பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அறிவித்துள்ளது.
முன்னதாக கோ ஃபர்ஸ்ட் (Go First) ஏர்லைன் நிறுவனம் கண்ணூர் செக்டருக்கு பயணிகளுக்கு 40 கிலோ பேக்கேஜ் அலவன்ஸை அறிமுகப்படுத்திய நிலையில், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் இந்த சலுகையை அறிவித்துள்ளது.
மஸ்கட்டிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் கேரளாவின் மற்ற மூன்று இடங்களுக்கு சேவைகளை இயக்கினாலும், கண்ணூருக்கு மட்டும் பேக்கேஜ் சலுகைகளை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. Go First மஸ்கட்டில் இருந்து கண்ணூருக்கு மட்டுமே நேரடி சேவைகளை இயக்குகிறது.